search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒர்க் ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
    X

    ஒர்க் ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

    • ஒர்க் ஷாப்பில் 10-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே நஞ்சகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரகு (வயது 33). இவர் ஈரோடு-சக்தி மெயின் ரோடு வெள்ளாளபாளையம் பிரிவு அருகே சொந்தமாக ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம் போல் ரகு ஒர்க் ஷாப்பில் பழுதாகி நின்ற ஒரு காரை சரி செய்து ஒர்க் ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டார்.

    ஒர்க் ஷாப்பில் 10-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை ஒர்க் ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்களில் ஒரு கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    அந்த கார் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு காரும் தீ பிடித்து எரிய தொடங்கியது. இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக கோபி செட்டிபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் ஒரு கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. மற்றொரு கார் பாதி எரிந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

    மேலும் விபத்து நடந்த ஒர்க் ஷாப் அருகே பெட்ரோல் பங்க் இருந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×