என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அதிவேகமாக சென்ற பஸ்சில் இருந்து கைக்குழந்தையுடன் தாய் கீழே விழுந்த வீடியோ விவகாரம்- டிரைவர் மீது வழக்கு
    X

    பஸ்சில் இருந்து குழந்தையுடன் பெண் தவறி விழுந்த வீடியோ காட்சியை படத்தில் காணலாம்.


    அதிவேகமாக சென்ற பஸ்சில் இருந்து கைக்குழந்தையுடன் தாய் கீழே விழுந்த வீடியோ விவகாரம்- டிரைவர் மீது வழக்கு

    • பேருந்தின் பின் படிக்கட்டு அருகே குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண் தலைக்குப்புற கைக்குழந்தையுடன் சாலையில் அலறி கொண்டு கீழே விழுந்தார்.
    • போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் தனியார் பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கடலூர்:

    பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பஸ் நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் அதிவேகமாக வந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் மீது மோதாமல் இருக்க ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்தார்.

    அப்போது பேருந்தின் பின் படிக்கட்டு அருகே குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண் தலைக்குப்புற கைக்குழந்தையுடன் சாலையில் அலறி கொண்டு கீழே விழுந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் குழந்தையையும், பெண்ணையும் மீட்க ஓடினர். இதனை கவனிக்காத ஓட்டுநர் மீண்டும் பஸ்சைஇயக்கத் தொடங்கினார்.

    அப்போது அங்கு இருந்தவர்கள் கூச்சலிடத்தால் பஸ்சை நிறுத்தினார். அந்த குழந்தையையும் தாயையும் அங்கிருந்த பொதுமக்கள் காப்பாற்றி லேசான காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு அந்தப் பெண் புகார் எதுவும் கொடுக்காமல் சென்று விட்டார்.

    இந்த நிலையில் இந்த பெண் பஸ்சில் இருந்து தலைக்குப்பற விழும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த உத்தர விட்டதை தொடர்ந்து நெல்லிக்குப்பம் போலீசார் இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பெண் யார் என தேடி வந்தனர்.

    நேற்றிரவு இந்த பெண் கடலூர் மாவட்டம் சின்னப்பகண்டை கிராமத்தை சேர்ந்த சித்தானந்தன். இவரது மனைவி ரம்யா (வயது30). இவர்களது பெண் குழந்தை கீர்த்தனா (வயது 3) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பெண் வீட்டிற்கு சென்ற போலீசார் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

    அப்போது அதிவேகமாக பேருந்து வந்த நிலையில் ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்ததால் கையில் குழந்தை வைத்திருந்த நிலையில் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டு தான் வெளியில் விழுந்ததாக அவர் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் சித்தானந்தன் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் தனியார் பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பஸ்சை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டியது மற்றும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தும் விதமாக செயல்பட்டதாக 2 பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×