search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் இன்று இடி-மின்னலுடன் மழை: கோடை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
    X

    சென்னையில் இன்று இடி-மின்னலுடன் மழை: கோடை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

    • சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. காலை 8 மணி முதல் இடிமின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
    • மழையினால் கோடை வெப்பம் இன்று தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

    சென்னை:

    சென்னையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. அனல் காற்றினால் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியாதபடி தவித்தனர்.

    பகலில் வெயிலினாலும் இரவில் வெப்பத்தின் தாக்குதலினாலும் மிகவும் அவதி அடைந்து வந்தனர். சென்னையில் சராசரியாக 106 டிகிரி முதல் 108 டிகிரி வரையும் பூந்தமல்லியில் 111 டிகிரி வரையும் வெயில் தனது அகோரமுகத்தை காட்டியது.

    இந்நிலையில் இன்று சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. காலை 8 மணி முதல் இடிமின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. எழும்பூர், கோயம்பேடு, அம்பத்தூர், விருகம்பாக்கம், கே.கே.நகர், வடபழனி, ஆழ்வார்பேட்டை, கொரட்டூர், கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    மழையினால் கோடை வெப்பம் இன்று தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. வறுத்தெடுத்த வெயிலினால் அவதியடைந்து வந்த பொது மக்கள் மழை பெய்ததை கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

    வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்பட 11 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் இடிமின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×