என் மலர்
தமிழ்நாடு
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியீடு
- தேர்வுத் துறையின் இணைய தளங்களில் பதிவேற்றும் பணி நிறைவு பெற்றுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
- திட்டமிட்டபடி நாளை மறுநாள் காலை 10 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற்றது.
சுமார் 9 லட்சம் பேர் எழுதிய 45 லட்சம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த 1-ந் தேதி முதல் 9-ந்தேதி வரை நடைபெற்றது.
விடைத்தாள்களை திருத்தி, மதிப்பெண்களை தொகுத்து அவற்றை தேர்வுத் துறை அதிகாரிகள் சரிபார்த்த பின், தேர்வுத் துறையின் இணைய தளங்களில் பதிவேற்றும் பணி நிறைவு பெற்றுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
எனவே திட்டமிட்டபடி நாளை மறுநாள் காலை 10 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் ஓரிரு நாட்களிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பள்ளிகள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் உடனடியாக 11-ம் வகுப்பில் சேர்ந்துகொள்ள வேண்டும் என்றும், நடப்பு கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்புகள் வரும் 27-ந் தேதி தொடங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.