என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
வேப்பேரி காவல் நிலையத்துக்கு சென்று போலீசாருக்கு ராக்கி கயிறு கட்டிய கல்லூரி மாணவிகள்
ByMaalaimalar30 Aug 2023 2:23 PM IST (Updated: 30 Aug 2023 2:23 PM IST)
- தமிழகத்திலும் ரக்ஷா பந்தன் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
- இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு, மற்றும் போக்குவரத்து சட்டம்- ஒழுங்கு காவலர்களுக்கு ராக்கி கயிறு கட்டப்பட்டது.
சென்னை:
சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி இன்று நாடு முழுவதும் பெண்கள் தாங்கள் சகோதரர்களாக கருதும் ஆண்களுக்கு ராக்கி கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.
தமிழகத்திலும் ரக்ஷா பந்தன் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. சென்னை வேப்பேரி ஜெயின் கல்லூரி மாணவிகள் இன்று வேப்பேரி போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று ரக்ஷா பந்தனையொட்டி காவலர்களின் கைகளில் ராக்கி கயிற்றை கட்டி மகிழ்ந்தனர்.
நெற்றியில் திலகமிட்டு, இனிப்பு வழங்கி அவர்கள் தங்களது சகோதர பாசத்தை வெளிப்படுத்தினார்கள்.
வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு, மற்றும் போக்குவரத்து சட்டம்- ஒழுங்கு காவலர்களுக்கு ராக்கி கயிறு கட்டப்பட்டது. இதை தொடர்ந்து காவலர்களும் மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
Next Story
×