என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மு.க.ஸ்டாலின்-அண்ணாமலை பகல் கனவு ஒரு போதும் பலிக்காது: திண்டுக்கல் சீனிவாசன்
- மகளிர் பேறுகால உதவித் தொகை 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார்கள். இதுவரை வழங்கவில்லை.
- பாராளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை மக்கள் பரிசாக தர இருக்கிறார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாணவர்கள் வாங்கிய கடனை ரத்து செய்வோம் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறி இருக்கிறது. இதுவரை தமிழக மாணவர்கள் வங்கிகளில் 16 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கி இருக்கிறார்கள். கடனை ரத்து செய்ய இந்த 3 ஆண்டுகளில் இதுகுறித்து எந்த அறிக்கையையும் தி.மு.க. அரசு வெளியிடவில்லை.
ஆனால் தற்போது நிதி நிலை அறிக்கையில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கல்விக் கடன் வங்கியின் மூலம் கிடைக்கச் செய்வோம் என்று கூறியுள்ளார்கள். ஏற்கனவே கல்விக் கடன் ரத்து என்ற வாக்குறுதி என்ன ஆனது?
கேஸ் மானியமாக 100 ரூபாய் வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் தி.மு.க. அறிவித்தது. தமிழகத்தில் 2 கோடிக்கும் மேற்பட்ட கேஸ் இணைப்புகள் உள்ளன. எப்போது தருவார்கள். ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்று கூறினார்கள். இதுவரை ஒரு தடுப்பணை கூட கட்டவில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். இதுவரை தி.மு.க. ஆட்சியில் 13 பேர் தற்கொலை செய்து விட்டார்கள். நீட் தேர்வுக்கு எதிராக ஒரு கோடி பேரிடம் கையெழுத்தை வாங்கி அனுப்புவோம் என்று கூறினார்கள். ஆனால் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் கையெழுத்து வாங்கியவை எல்லாம் குப்பை தொட்டியில் போடப்பட்டன. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்தவில்லை. மகளிர் பேறுகால உதவித் தொகை 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார்கள். இதுவரை வழங்கவில்லை.
இன்றைக்கு பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பை போல மு.க.ஸ்டாலின் ஜூன் 4-ந்தேதிக்கு கொடி ஏற்ற தயாராகுங்கள் என்று கூறியிருக்கிறார். அதே போல அண்ணாமலையும் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று கூறி வருகிறார். ஆனால் இன்றைக்கு மக்கள் தெளிந்த நீரோடை போல் இருக்கிறார்கள். இந்த இருவரின் பகல் கனவு என்றைக்கும் பலிக்காது.
இந்த பாராளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை மக்கள் பரிசாக தர இருக்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணாமலைக்கு கனவாகவே இருக்கும்.
இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்