என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
எழும்பூர் ரெயில் நிலைய மறு சீரமைப்பு பணி விரைவில் தொடங்கும்- கதிர் ஆனந்த் எம்.பி. கேள்விக்கு மத்திய மந்திரி பதில்
- சென்னை எழும்பூர் மற்றும் காட்பாடி ரெயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு பணிகளுக்கு டெண்டர்களும் விடப்பட்டுள்ளன.
- வாணியம்பாடியில் மாநில அரசு நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும் மறு ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
வேலூர்:
பாராளுமன்றத்தில் வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் பேசினார். அப்போது தென்னக ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் 18 ரெயில் நிலையங்களை நவீனமயமாக்கும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் தற்போதைய நிலை மற்றும் ஒவ்வொரு நிலையத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதி விவரம் எவ்வளவு?
அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட 18 நிலையங்களைத் தவிர மேலும் பல நிலையங்களை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா?
சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் காட்பாடி ரெயில் நிலைய சந்திப்பு ஆகியவற்றின் நவீனமயமாக்கல் மற்றும் மறுவடிவமைப்பு ஆகியவற்றின் தற்போதைய நிலை மற்றும் முடிவடையக்கூடிய தோராயமாக எப்போது முடியும்?
சென்னையில் உள்ள கிண்டி, சைதாப்பேட்டை, மாம்பலம் ரெயில் நிலையங்களில் வளர்ச்சிப் பணிகளின் தற்போதைய நிலை என்ன என கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து பூர்வமாக பதில் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர், காட்பாடி, தாம்பரம், டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல், ஆவடி, சென்னை கடற்கரை, திருவள்ளூர், அரக்கோணம் ஜே.என், செங்கல்பட்டு ஜே.என்., கிண்டி, பெரம்பூர், அம்பத்தூர், மாம்பலம், சென்னை பூங்கா, செயின்ட் தாமஸ் மவுண்ட், கூடுவாஞ்சேரி, திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை நிலையங்களின் நவீனமயமாக்கல் மேம்படுத்துதல் மேம்பாடு என்பது போக்குவரத்தின் அளவு, பணிகளுக்கு இடையேயான முன்னுரிமை மற்றும் நிதி இருப்பு ஆகியவற்றைப் பொறுத்து தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும்
சென்னை எழும்பூர் மற்றும் காட்பாடி ரெயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு பணிகளுக்கு டெண்டர்களும் விடப்பட்டுள்ளன.
ரெயில் நிலையங்களின் மேம்பாடு மறுவளர்ச்சி மேம்படுத்துதல் என்பது பயணிகள் மற்றும் ரெயில்களின் பாதுகாப்பை உள்ளடக்கிய பல்வேறு சிக்கலான அம்சங்கள் கொண்டது.
மேலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பல்வேறு சட்டரீதியான அனுமதிகள் தேவை எனவே பனிகள் முடிவடைவதில் காலக்கெடு எதுவும் குறிப்பிட முடியாது.
சென்னையின் கிண்டி மற்றும் மாம்பலம் ரெயில் நிலையங்கள் அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் மேம்பாட்டிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
சைதாப்பேட்டை புறநகர் கிரேடு 3 ரெயில் நிலையம் மற்றும் பயணிகளின் போக்குவரத்திற்கு ஏற்ப அனைத்து குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகளும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடியில் மாநில அரசு நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும் மறு ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்