என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்காக தி.மு.க.வில் தேர்தல் பணிக்குழு பட்டியல் தயாராகிறது
    X

    ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்காக தி.மு.க.வில் தேர்தல் பணிக்குழு பட்டியல் தயாராகிறது

    • காங்கிரஸ் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டதும் தி.மு.க.வில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்படும் என்று காங்கிரஸ் தலைவரிடம் தெரிவிக்கப்பட்டது.
    • காங்கிரஸ் சார்பிலும் தேர்தல் பணிக்குழு பட்டியல் தயாராகி வருவதாக அழகிரி தெரிவித்தார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா கடந்த 4-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்களுடன் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து பேசி இந்த முடிவை வெளியிட்டார்.

    இதையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அண்ணா அறிவாலயம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, டி.கே.எஸ்.இளங்கோவன், எ.வ.வேலு, ஆ.ராசா, பூச்சிமுருகன் ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வியூகம் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.

    வேட்பாளர் யார் என்பதை கட்சி மேலிட நிர்வாகிகளுடன் விரைந்து முடிவு செய்து அறிவிப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

    காங்கிரஸ் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டதும் தி.மு.க.வில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்படும் என்று காங்கிரஸ் தலைவரிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் சார்பிலும் தேர்தல் பணிக்குழு பட்டியல் தயாராகி வருவதாக அழகிரி தெரிவித்தார்.

    தி.மு.க. தேர்தல் பணிக்குழு பட்டியலில் அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில்பாலாஜி, வெள்ளக்கோவில் சாமிநாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. இது சம்பந்தமாக நிர்வாகிகள் பட்டியல் தயாராகி வருவதாகவும் விரைவில் வெளியிடப்படும் என்றும் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×