என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மேகதாது விவகாரம்: மத்திய மந்திரி நடுநிலையுடன் பேச வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்
- மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சரின் செயல்பாடானது நடுநிலையானதாக, விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
- தமிழ்நாட்டின் உரிமை, விவசாயிகளின் நலன் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நியாயம் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநில மக்களின் தண்ணீர் தேவை மிக மிக முக்கியமான ஒன்று.
மேகதாதுவில் அணைக் கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சியானது தமிழக டெல்டா விவசாயிகளை மிகப்பெரிய அளவில் பாதிக்கும். மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும்.
அப்படி இருக்கும் போது கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சரின் செயல்பாடானது நடுநிலையானதாக, விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
மேலும் கர்நாடகம்- தமிழ்நாடு ஆகிய இரு மாநில நலனை, உறவை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் வரும் நாட்களில் மேகதாது அணை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுவதை தவிர்க்க வேண்டும்.
எனவே மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமை, விவசாயிகளின் நலன் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நியாயம் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.