search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தங்கம் விலை மீண்டும் ரூ.42 ஆயிரத்தை தொட்டது
    X

    தங்கம் விலை மீண்டும் ரூ.42 ஆயிரத்தை தொட்டது

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.42 ஆயிரத்தை தொட்டுள்ளது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    2 மாதங்களுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் ரூ.37 ஆயிரத்தை தாண்டி விற்கப்பட்டது. அதன் பிறகு ரூ.38 ஆயிரம், ரூ.39 ஆயிரம், ரூ.40 ஆயிரம், ரூ.41 ஆயிரம் என தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    கடந்த 9-ந்தேதி தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. அன்று ரூ.42,080-க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்தது.

    நேற்று 1 பவுன் தங்கம் ரூ.41,888-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ. 42 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

    அதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.42 ஆயிரத்தை தொட்டுள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,236-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.5,250-க்கு விற்கப்படுகிறது.

    அதே நேரத்தில் வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. இன்று 1 கிராம் வெள்ளி ரூ.74-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.74 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    Next Story
    ×