search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்பு எதிரொலி... இன்றும் குறைந்த தங்கம் விலை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்பு எதிரொலி... இன்றும் குறைந்த தங்கம் விலை

    • நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்தது.
    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத்தில் நேற்று 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இதையடுத்து நேற்றே தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ஒரு சவரன் ரூ.52,400-க்கும் கிராமுக்கு ரூ.275 குறைந்து ஒரு கிராம் ரூ.6,550-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.51,920-க்கும் கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ6,490-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் 92 ரூபாய்க்கும் கிலோவுக்கு ரூ.500 குறைந்து பார் வெள்ளி ரூ.92ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.


    Next Story
    ×