search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சர்க்கரை, பிரசர், இருதயநோய்க்கு அடுப்பில்லாமல் சமைத்த ஆரோக்கிய உணவுகள்
    X

    கண்காட்சியில் இடம்பெற்றிருந்த ஆரோக்கிய உணவுகள்.

    சர்க்கரை, பிரசர், இருதயநோய்க்கு அடுப்பில்லாமல் சமைத்த ஆரோக்கிய உணவுகள்

    • தற்போதைய அவசர உலகில் இயந்திரமயமாக மனிதர்கள் உழைத்து வருகின்றனர்.
    • சராசரி வயதை காட்டிலும் குறைந்த வயதிலேயே பல்வேறு நோய்களுக்கு ஆளாகி விடுகின்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தில் பல்வேறு நோய்களுக்கு தேவைப்படும் ஆரோக்கிய உணவுகளை அடுப்பில்லாமல் சமைப்பது எப்படி என்பது குறித்த கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயற்கை உணவியல் நிபுணர் சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தற்போதைய அவசர உலகில் இயந்திரமயமாக மனிதர்கள் உழைத்து வருகின்றனர். இதனால் சராசரி வயதை காட்டிலும் குறைந்த வயதிலேயே பல்வேறு நோய்களுக்கு ஆளாகி விடுகின்றனர். குறிப்பாக சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய்கள் போன்றவை இளைய சமுதாயத்தினரையும் விட்டு வைக்கவில்லை. இந்த நோய்கள் அனைத்தும் உணவு பழக்கவழக்கத்தால் ஏற்படுகிறது.

    நம் முன்னோர்கள் இன்றும் 60 வயதை கடந்தும் கண்ணாடி இல்லாமல் தெளிவாக படிக்கும்பொழுது நம் குழந்தைகள் சிறுவயதிலேயே கண்பார்வை குறைபாடுக்கு ஆளாகி வருகின்றனர். நோயின்றி வாழ இயற்கை உணவு, பாரம்பரிய மற்றும் சிறுதானிய உணவு, எண்ணெய் இல்லா உணவு தயாரிப்பது குறித்து தீவிர தேடுதலுக்கு பின் இந்த முறையை நாங்கள் கண்டறிந்தோம். தற்போது அடுப்பில்லாமல், எண்ணெய் இல்லாமல், உணவுகளில் சத்துக்கள் குறையாமல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு வகைகளை வழங்கி வருகிறோம். வாழைப்பூ வடை, கொத்தமல்லி பொங்கல், வரகு கிச்சடி, பீட்ரூட் சட்னி, பாதாம் பாயாசம் உள்ளிட்ட 12 வகைகள் தற்போது தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது என்றார். இந்த கண்காட்சியில் கலந்து கொண்டோர் உணவு தயாரிக்கும் முறைபற்றி தெரிந்து கொண்டதோடு பாரம்பரிய உணவு, நோயற்ற வாழ்வுக்கு தேவையான உணவு முறைகள் குறித்து அறிந்து கொண்டனர்.

    Next Story
    ×