என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் நகைக்கடையில் வருமான வரி சோதனை
- வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதா என தீவிர விசாரணை நடத்தினர்.
- நகை கடைகளில் சோதனை நடந்ததால் மற்ற கடைக்காரர்கள் உடனே கடைகளை மூடி விட்டு சென்றனர்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் ஏராளமான நகைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இதில் செஞ்சி சாலையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார் நகை கடையும், வந்தவாசி சாலையில் பிரபலமான நகைக்கடையும் உள்ளன.
இந்த கடைகளில் நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் மற்றும் வருமான வரித்துறை ஆணையாளர் சுப்பிரமணி தலைமையில் 20 பேர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காகpe நகைகள் ஏதாவது மொத்தமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளதா? நகை கடையில் வருமான வரி முறையாக கட்டப்பட்டுள்ளதா? வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதா என தீவிர விசாரணை நடத்தினர்.
நேற்று இரவு 7 மணி அளவில் தொடங்கிய சோதனை இரவு வரை தொடர்ந்து நீடித்தது. நகரின் முக்கிய நகை கடைகளில் திடீர் சோதனை நடந்ததால் மற்ற கடைக்காரர்கள் உடனே கடைகளை மூடி விட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.