search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இலவச பஸ் பயணம் செய்யும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
    X

    இலவச பஸ் பயணம் செய்யும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

    • இலவச பயணம் திட்டத்தின் மூலம் மே 9 வரை 468 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர்.
    • இலவச பஸ் பயண திட்டத்தில் பயணம் செய்யும் 60 சதவீத பெண்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    சென்னை:

    2021-ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று, தமிழ்நாடு அரசு பெண்களுக்கான கட்டணமில்லா அரசு பஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இந்த திட்டம் ஜூலை 2021-ல் நடைமுறைக்கு வந்தது. இலவச பஸ் பயண திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து நாளுக்கு நாள் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.

    ஜூலை 2021-ல் ஒரு நாளைக்கு 35 லட்சம் பெண்கள் இலவச பயணம் செய்த நிலையில் இப்போது இதன் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. இந்த மார்ச் மாதம் கணக்கெடுத்து பார்க்கும் போது ஒரு நாளைக்கு 55 லட்சம் பெண்கள் இலவச பஸ்சில் பயணம் செய்வது தெரிய வந்துள்ளது.

    இதன் மூலம் ஏழை, நடுத்தர பெண்கள் மாதம் ரூ.800 முதல் ரூ.1,283 வரை பஸ்சுக்கு செலவழிப்பது மிச்சமாவதாக தெரிவிக்கின்றனர்.

    5984 நகர வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த பிங்க் கலர் பஸ்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கூடுதலாக 257 வழித்தடங்களில் இப்போது இயக்கப்பட்டு வருகிறது.

    தமிழக அரசு கடந்த 3 நிதியாண்டுகளில் இலவச பஸ் பயண திட்டத்திற்காக ரூ.6,946 கோடியை ஒதுக்கி இருந்த நிலையில் இப்போது இந்த நிதியாண்டுக்கு ரூ.3,050 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

    இந்த இலவச பயணம் திட்டத்தின் மூலம் மே 9 வரை 468 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர்.

    மாநில திட்டக்குழுவின் ஆரம்ப தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கையில் இத்திட்டம் குறைந்த வருமானம் உள்ள பெண்களுக்கு உதவியதாகவும், இதன் மூலம் அவர்கள் பஸ் பயணத்துக்கு செலவிடுவது சேமிக்கப்படுவதாகவும் இது அவர்களது வாழ்க்கையை பொருளாதார ரீதியாக முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதன் மூலம் சமூக அமைப்பில் பெண்கள் அந்துஸ்து பொருளாதார ரீதியாக உயர்ந்துள்ளதோடு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இத்திட்டம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் இலவச பஸ் பயண திட்டத்தில் பயணம் செய்யும் 60 சதவீத பெண்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×