search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தற்கொலைகள் அதிகரிப்பு: நீட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்- திருமாவளவன் வலியுறுத்தல்
    X

    தற்கொலைகள் அதிகரிப்பு: நீட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்- திருமாவளவன் வலியுறுத்தல்

    • தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
    • நிஷாந்தி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம், வயலப்பாடி அருகே உள்ள கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி நிஷாந்தினி நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவலறிந்து மிகுந்த வேதனையும் துக்கமும் மேலிடுகிறது. அவரது குடும்பத்தை எண்ணி வெகுவாகத் துயரப்படுகிறேன்.

    மருத்துவம் படிப்பது தான் மானத்திற்குரியது என்று இந்த பெண் பிள்ளைக்கு யார்தான் கற்பித்தது? நீட் தேர்வில் தேர்ச்சியடையா விட்டாலும்; அல்லது தேர்ச்சிப் பெற்றாலும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கா விட்டால் அப்படி என்ன இழுக்கு ஏற்பட்டு விடும்?

    இத்தனை இளங்குருத்து கள் நீட் என்னும் கொடிய நஞ்சினால் அவிந்து போயுள்ள நிலையிலும் இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களின் நெஞ்சில் ஒருதுளியும் ஈரமில்லை என்பது பேரதிர்ச்சியை அளிக்கிறது.

    அனிதா முதல் நிஷாந்தி வரை இதுவரையில் 17 பேரை தமிழ்நாடு நீட்டுக்குப் பறிகொடுத்துள்ளது. ஆனால், இந்திய ஆட்சியாளர்கள் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை.

    ஒருமுறைக்கு இருமுறை நீட் விலக்கு மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, தமிழ்நாடு அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தும் பா.ஜ.க. அரசு மெத்தனம் காட்டிவருகிறது. அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இன்னும் காலம் தாழ்த்தி வருவதன் விளைவாகவே அடுத்தடுத்து இரண்டு மாணவர்கள் பலியாக நேர்ந்துள்ளது.

    தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    நிஷாந்தி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அக்குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ. 1 கோடி வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×