search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் ஆய்வாளர் கைது
    X

    எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் ஆய்வாளர் கைது

    • எம்.ஆர்.விஜயபாஸ்கரை வரும் 31ஆம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.
    • இதுவரை தாம்பரம் காவல் நிலையத்தில் பிரித்விராஜ் பொறுப்பேற்காத நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    போலி பத்திரம் மூலம் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    நேற்று காலை கேரளா சென்று எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி போலீசார், மதியம் சுமார் 2.10 மணியளவில் கரூருக்கு அழைத்து வந்து திண்ணப்பா நகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கரை வரும் 31ஆம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், நில மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கரூர் சார் பதிவாளர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் விசாரித்த போது, ஆய்வாளர் பிரித்விராஜ் அதுபோன்று சான்று கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆய்வாளர் பிரித்விராஜ் கரூர் நகர காவல் நிலையத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த பிரித்விராஜ் தாம்பரம் காவல் நிலையத்திற்கு மாற்றம் வாங்கி சென்றுள்ளார். இதுவரை தாம்பரம் காவல் நிலையத்தில் பிரித்விராஜ் பொறுப்பேற்காத நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    Next Story
    ×