என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நீலகிரி மாவட்ட சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு: மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
- கேரளா-நீலகிரி மாவட்ட எல்லைச் சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- கூடலூர் வனப்பகுதி தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில எல்லை பகுதியில் வருவதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ஊட்டி:
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்ட வனப்பகுதியில் அதிரடிப்படை போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
அதிரடிப்படை வீரர்களும் துப்பாக்கியால் சுட்டு பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே நீண்டநேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் மாவோயிஸ்டுகள் சிலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதேபோல கடந்த வாரமும் அதிரடிப்படை வீரர்களுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து சிலர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கேரள மாநில எல்லைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருப்பதால் அதனை ஒட்டிய நீலகிரி மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
கேரளா-நீலகிரி மாவட்ட எல்லைச் சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஓவேலி, நாடுகாணி, சோலாடி, நம்பியார்குன்னு, பாட்டவயல் ஆகிய சோதனைச் சாவாடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும் வாகனங்களை தீவிர சோதனை நடத்தி அனுமதிக்கின்றனர்.
கூடலூர் வனப்பகுதி தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில எல்லை பகுதியில் வருவதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சோதனைச்சாவடிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு பணிகளை உஷார்படுத்தினார். பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு ஆலோசனைகள் வழங்கினார்.