search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    பாக்கெட் மது ஜூஸாகவும் மாறலாம்...! -டி.ஜெயக்குமார்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பாக்கெட் மது ஜூஸாகவும் மாறலாம்...! -டி.ஜெயக்குமார்

    • பாட்டிலுக்கு பதில் டெட்ரா மதுபானம் வருகிறதாம்.
    • 90 எம்.எல். கொண்ட இந்த பாக்கெட்டுக்களை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வீடுகளுக்கு செல்வார்கள்.

    அமைச்சர் முத்துசாமியின் ஆலோசனை கொஞ்சம் கூட பொருந்தாதது என்றார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார். அவர் கூறியதாவது:-

    காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடைகளை திறக்க போவதாகவும், அது வேலைக்கு செல்வோருக்கு உதவிகரமாக இருக்கும் என்பது போலவும் அமைச்சர் முத்துசாமி கருத்து தெரிவித்து உள்ளார்.

    காலையில் வேலைக்கு போகும்போதே சரக்கு போட்டுக்கொண்டு போனால் நிலைமை என்ன ஆகும்? யோசித்து பாருங்கள். வேலை நடக்குமா? இல்லை வேலை நடக்கும் இடத்துக்கு ஒழுங்காக போய் சேருவார்களா? அடுத்து இன்னொரு சீர் திருத்தத்தையும் கொண்டு வருகிறார்களாம். அதாவது பாட்டிலுக்கு பதில் டெட்ரா மதுபானம் வருகிறதாம். 90 எம்.எல். கொண்ட இந்த பாக்கெட்டுக்களை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வீடுகளுக்கு செல்வார்கள். அங்கு பிரிட்ஜிலோ அல்லது எங்கேயாவது வைத்திருப்பார்கள். இதை பார்க்கும் குழந்தைகள் என்ன நினைக்கும்? ஜூஸ் பாக்கெட்டுதான் வைத்திருக்கிறார்கள் என்று அதை எடுத்து குடிக்க தொடங்கும். ஆக வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் குடிக்க பழக்க பார்க்கிறார்கள் என்றார்.

    Next Story
    ×