என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
உலகக் கோப்பை செஸ்- பிரக்ஞானந்தாவை வாழ்த்திய கமல்ஹாசன்
- உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டியின் டை பிரேக்கர் சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன.
- இன்றைய டை பிரேக்கர் சுற்றின் முடிவில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.
உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டி நான்கு சுற்றுகளாக நடைபெற்றது. முதல் இரண்டு சுற்றுகள் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து இன்று டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. டை பிரேக்கர் சுற்றின் முடிவில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து விளையாடிய தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டியில் முதல் இரண்டு சுற்றுகளில் சமனில் முடித்தார். ஐந்து முறை சாம்பியன் பெட்டம் வென்றிருந்த மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து இறுதிப் போட்டியில் கடைசி நொடி வரை விறுவிறுப்பாக்கிய பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்தார்.
செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் வீரரும், 5 முறை உலகச் சாம்பியனுமான @MagnusCarlsen - ஐ எதிர்கொண்டு இந்தியாவிற்காகக் களமிறங்கிய தமிழக வீரர் @rpragchess இறுதிவரை தீரத்துடன் போராடினார். வெற்றிவாய்ப்பினை நூலிழையில் தவறவிட்டாலும் பல கோடி… pic.twitter.com/NXLJBfSBw6
— Kamal Haasan (@ikamalhaasan) August 24, 2023
இந்த நிலையில், உலகக் கோப்பை செஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தாவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அதில், "செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் வீரரும், 5 முறை உலகச் சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன்- ஐ எதிர்கொண்டு இந்தியாவிற்காகக் களமிறங்கிய தமிழக வீரர் பிர்கஞானந்தா இறுதிவரை தீரத்துடன் போராடினார். வெற்றிவாய்ப்பினை நூலிழையில் தவறவிட்டாலும் பல கோடி மனங்களை ஈர்த்த பிரக்ஞானந்தா நம் பெருமிதம். அவருக்கு என் வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.