என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கொடநாடு விவகாரம்: ரூ. 1.10 கோடி மான நஷ்ட ஈடு கோரி எடப்பாடி பழனிசாமி மனு
- ஜாமீனில் உள்ள தனபால், பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகிறார்.
- எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருக்கிறார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்த நிலையில், வழக்கு தொடர்பான விவரங்கள் தெரிந்திருந்தும், அவற்றை மறைத்ததாக கூறி கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த இருவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.
ஜாமீனில் உள்ள தனபால், பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகிறார். தனது தம்பி உயிரிழக்கவில்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். இந்த சம்பவங்கள் கொடநாடு வழக்கில் திருப்புமுனையாக அமைந்து இருக்கிறது.
இதனிடையே கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருக்கிறார். அந்த மனுவில், ரூ. 1 கோடியே 10 லட்சம் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்து இருக்கும் மனு செப்டம்பர் 19-ம் தேதி நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது.