search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடற்கரை மாவட்டங்களில் 121 இடங்களில் புயல்-பேரிடர் பாதுகாப்பு முகாம்கள் தயார்: அமைச்சர் தகவல்
    X

    கடற்கரை மாவட்டங்களில் 121 இடங்களில் புயல்-பேரிடர் பாதுகாப்பு முகாம்கள் தயார்: அமைச்சர் தகவல்

    • மனித உயிர் சேதம், கால்நடை உயிர் சேதம் போன்றவற்றை தவிர்க்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க அறிவுறுத்தி உள்ளோம்.
    • ஏரி-குளங்கள் நிறையும் போது கரையோர மக்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்துதான் தண்ணீர் திறக்கப்படும்.

    சென்னை:

    சென்னையில் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் நிவாரண முகாம்களும், மீட்பு படைகளும் தயார் படுத்தப்பட்டுள்ளன. எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும் அதை சந்திக்கக்கூடிய அளவுக்கு அரசு நிர்வாகம் உள்ளது.

    மொத்தம் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் (புயல்-பேரிடர்) கடலோர மாவட்டங்களில் வைத்துள்ளோம். நிவாரண முகாம்கள் 4917 தயார் நிலையில் வைத்துள்ளோம். பெரிய அளவுக்கு மழை இல்லை. நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மாவட்ட கலெக்டர்களுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம். மனித உயிர் சேதம், கால்நடை உயிர் சேதம் போன்றவற்றை தவிர்க்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க அறிவுறுத்தி உள்ளோம்.

    ஏரி-குளங்கள் நிறையும் போது கரையோர மக்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்துதான் தண்ணீர் திறக்கப்படும்.

    இப்போது வைகை அணை திறக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கரையோர மக்களுக்கு 80 ஆயிரம் பேருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×