என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் தகவல்
- பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
- 40 சிற்றுந்துகள் பயணிகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை :
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருநாள் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டும். 27/11/2023 அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும். 25/11/2023 சனிக்கிழமை முதல் 27/11/2023 வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக சிறப்பு பேருந்துகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, சென்னையிலிருந்தும்.
தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 2700 சிறப்பு பேருந்துகள் மூலம் 6947 நடைகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளது. மேலும், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக 40 சிற்றுந்துகள் பயணிகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகள் புறப்படும் இடங்கள் ஆகிய விவரம்.
வ.எண் | தற்காலிக பேருந்து நிலையம் (திருவண்ணாமலை) | மார்க்கம் |
1 | வேலூர் ரோடு - Anna Arch | போளூர், வேலூர், ஆரணி, ஆற்காடு. செய்யாறு |
2 | அவரலூர்பேட்டை ரோடு – SRGOS பள்ளி எதிரில் | சேத்துப்பட்டு, வந்தவாசி. காஞ்சிபுரம் |
3 | திண்டிவனம் ரோடு - ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் | செஞ்சி, திண்டிவனம். புதுச்சேரி, தாம்பரம், அடையாறு, கோயம்பேடு |
4 | வேட்டவலம் ரோடு - சர்வேயர் நகர் | வேட்டவலம், விழுப்புரம் |
5 | திருக்கோயிலூர் ரோடு - ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், அருணை மருத்துவக் கல்லூரி அருகில் மற்றும் வெற்றி நகர் | திருக்கோயிலூர். பண்ருட்டி. கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திட்டக்குடி, விருத்தாச்சலம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி |
6 &7 | மணலூர்பேட்டை ரோடு - செந்தமிழ் நகர் | மணலூர்பேட்டை. கள்ளக்குறிச்சி. தானிப்பாடி. சாத்தனூர் அணை |
8 | செங்கம் ரோடு - அத்தியந்தல் மற்றும் சுபிக்க்ஷா கார்டன் | செங்கம். தருமபுரி, திருப்பத்தூர், சேலம். பெங்களூரு, ஓசூர், ஈரோடு, கோயம்புத்தூர் |
9 | காஞ்சி ரோடு - டான் பாஸ்கோ பள்ளி | காஞ்சி. மேல்சோழங்குப்பம் |
மேலும் பயணிகள் கூட்டம் குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிடவும். பக்தர்களுக்கு எவ்விதமான அசௌகரியம் ஏற்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்களுக்கு தகுந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்