search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கவர்னர் பங்கேற்ற விழாவை புறக்கணித்த அமைச்சர் சாமிநாதன்
    X

    கவர்னர் பங்கேற்ற விழாவை புறக்கணித்த அமைச்சர் சாமிநாதன்

    • விழாவில் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பேரவை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    • கவர்னர் ஆர்.என்.ரவி திருச்சியிலிருந்து தஞ்சை வரும் வழித்தடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டு, 43 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று 14-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் வரவேற்று பேசினார். திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பஞ்சநதம் சிறப்புரையாற்றினார்.

    இவ்விழாவில் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி 100 முனைவர் பட்ட ஆய்வாளர்கள், 76 ஆய்வியல் நிறைஞர்கள், முதுகலையில் 212 மாணவர்கள், இளங்கல்வியியலில் 190 மாணவர்கள், பல்வேறு பாடப்பிரிவுகளில் 68 பேர் என மொத்தம் 656 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.

    சிறந்த மதிப்பெண்கள், புள்ளிகளைப் பெற்ற 8 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கினார். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 25 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மாற்றுத்திறனாளிகள், திருநங்கை ஒருவரும் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இந்த விழாவில் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பேரவை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கவர்னர் ஆர்.என்.ரவியின் தஞ்சாவூர் வருகையை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது தவிர கவர்னர் ஆர்.என்.ரவி திருச்சியிலிருந்து தஞ்சை வரும் வழித்தடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தமிழ் பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக இணை வேந்தரும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சருமான சாமிநாதன் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் வரவில்லை.

    நேற்று கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்ட நிலையில் இன்று கவர்னர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை அமைச்சர் சாமிநாதன் புறக்கணித்ததாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×