என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
வேலூர் ஜெயிலில் முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டார்
- வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி முருகன் கடந்த மாதம் 8-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்தார்.
- ஜெயில் உணவை தவிர்த்து அவர் தண்ணீர் மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிட்டார்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் அடைக்கப் பட்டுள்ள முருகன், பரோல் வழங்க வலியுறுத்தி பலமுறை சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார்.
அவர் மீது சிறை விதிமீறல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி முருகன் கடந்த மாதம் 8-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்தார். சிறை அதிகாரிகள் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.ஆனால் முருகன் உண்ணாவிரதத்தை கைவிட வில்லை. ஜெயில் உணவை தவிர்த்து அவர் தண்ணீர் மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிட்டார்.
முருகனின் உடல்நிலை மோசமானதால் அவருக்கு ஜெயில் வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது தொடர்ந்து டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் சிறை காவலர் ஒருவரை அவதூராக பேசிய வழக்கு சம்பந்தமாக முருகன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.
அவரிடம் உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி சிறை அதிகாரிகள் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து 52 நாட்களுக்கு பிறகு முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டார். இன்று காலை அவர் ஜெயில் உணவை சாப்பிட்டார்.