search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவு முறிந்தாலும் நாடகம் என்றாலும், எந்த கவலையும் இல்லை - ஓ.பி.எஸ்.
    X

    அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவு முறிந்தாலும் நாடகம் என்றாலும், எந்த கவலையும் இல்லை - ஓ.பி.எஸ்.

    • கடந்த ஒரு மாதமாக பா.ஜ.க. தேசிய தலைமையிடம் பேசிக் கொண்டு வருகிறேன்.
    • அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவு முறிந்தாலும் அது நாடகம் என்றாலும், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.

    பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதைத் தொடர்ந்து, அக்கட்சியுடன் இனி எந்த தேர்தலிலும் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

    இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயார் என்று அறிவித்து இருக்கிறார்.

    இது குறித்து பேசிய ஓ. பன்னீர்செல்வம், " கடந்த ஒரு மாதமாக பா.ஜ.க. தேசிய தலைமையிடம் பேசிக் கொண்டு வருகிறேன். பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி முறிவு நாடகம் என்று நீங்களே கூறுகின்றீர்கள். பா.ஜ.க.-வுக்கு தொடர்ந்து நம்பிக்கை துரோகம் செய்வது யார் என உங்களுக்கு தெரியும்."

    "பிரதமருக்கு அருகில் இருந்துவிட்டு தற்போது உறவு இல்லை என்று சொல்வது யார்? பா.ஜ.க. தேசிய தலைமையிடம், மாநில தலைமையை மாற்ற கோரிக்கை வைக்க எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி உள்ளது. மூன்றாவது முறையும், நாட்டை ஆள்வதற்கான தகுதியை பா.ஜ.க. பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவும் தயாராக இருக்கிறோம்."

    "அ.தி.மு.க. ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும். பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் ஒரே தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவு முறிந்தாலும் அது நாடகம் என்றாலும், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை," என்று அவர் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×