என் மலர்
தமிழ்நாடு

X
அதிமுக பொதுக்குழு வழக்கு- உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு
By
மாலை மலர்6 Sept 2022 4:10 PM IST

- தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அளித்த உத்தரவு ரத்து.
- இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு.
அதிமுக சார்பில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தீர்ப்பு அளித்தது. இதன்மூலம் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த உத்தரவு ரத்தானது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, வரும் திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஓபிஎஸ் தரப்பு கடந்த சனிக்கிழமை தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
Next Story
×
X