search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மலைப்பகுதியில் சாரல் மழை: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 77 அடியை எட்டியது
    X

    மலைப்பகுதியில் சாரல் மழை: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 77 அடியை எட்டியது

    • மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
    • ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டங்களில் விவசாய பணிகள் வேகமெடுத்துள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை பகுதியில் 4 மில்லிமீட்டரும், சேர்வலாறில் ஒரு மில்லிமீட்டரும் மழை பெய்தது. மழையால் இந்த அணைகளுக்கு நீர்வரத்து வினாடிக்கு 850 கனஅடியாக இருந்து வருகிறது.

    அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 404.75 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 77.10 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 91.14 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 82.08 அடியாக உள்ளது. அங்கு இன்று காலை நிலவரப்படி 3.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை மற்றும் அதனை சுற்றிலும் உள்ள தேயிலை எஸ்டேட்டுகளில் நேற்று கனமழை பெய்தது. நாலுமுக்கு எஸ்டேட்டில் இன்று காலை வரை 62 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 41 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 28 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாஞ்சோலையில் 7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அம்பையில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் இன்று காலை முதலே வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு காணப்படுகிறது. லேசான சாரல் மழை பெய்து வருகிறது. குளிர்ந்த காற்று வீசி வருவதால் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்காசியில் ஒரு மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 3 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் இதமான சீதோஷண நிலை நிலவி வருவதால் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    Next Story
    ×