search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாக்களித்தது குறித்து அனுபவம் பகிரும் முதல்முறை வாக்காளர்கள்
    X

    வாக்களித்தது குறித்து அனுபவம் பகிரும் முதல்முறை வாக்காளர்கள்

    • தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ள நிலையில் 10.92 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
    • முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகம், புதுவை உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதல்கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவு தொடங்கிய காலை முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 26. 58 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 20.09 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ள நிலையில் 10.92 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

    முதல் முறை வாக்களிக்கும் கல்லூரி மாணவிகள் கூறுகையில், வாக்களிப்பதை சரியாக செய்ய வேண்டும் என்ற ஆவலும், பதற்றமும் உள்ளது. கொஞ்சம் பயமாகவும் இருக்கும். வாக்களிக்கும் முறை சொல்லி இருக்காங்க. முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் வாக்களிப்பதை ஸ்கிப் செய்யக்கூடாது. சில சமயங்களில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களால் கூட முடிவு மாறலாம். இது நம்மளோட உரிமை என்றனர்.

    இதனிடையே முதல்முறை வாக்களிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து வந்த மாணவி, வாக்களிப்பது கடமை, கட்டாயம். முதல் முறையாக வாக்களித்து புது அனுபவமாக இருந்தது. முதலில் என்ன செய்வது என்று தெரியவில்லை. பிறகு அங்கு இருந்தவர்கள் வழிகாட்டினார்கள் என்றார்.

    Next Story
    ×