என் மலர்
தமிழ்நாடு
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
திருவொற்றியூரில் பூங்காவை காணவில்லை- கலெக்டர் அலுவலகத்தில் மனு
BySuresh K Jangir17 April 2023 4:30 PM IST (Updated: 17 April 2023 5:54 PM IST)
- தொண்டர் இயக்கம் சார்பில் அதன் தலைவர் தொண்டன் சுப்பிரமணி, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று கொடுத்தார்.
- கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு தொண்டர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை:
தொண்டர் இயக்கம் சார்பில் அதன் தலைவர் தொண்டன் சுப்பிரமணி, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் செயல்பாட்டில் இருந்த கேசவன் பூங்காவை காணவில்லை. அந்த பூங்காவை மீண்டும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு தொண்டர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சினிமா படத்தில் கிணற்றை காணவில்லை என்று போலீஸ் நிலையத்தில் புகார் செய்யும் காமெடி காட்சி பிரபலமானதால் இது போன்று கிணறு, குளம் ஆகியவற்றை காணவில்லை என்று போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X