என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
பிளஸ்-2 துணைத்தேர்வு: அடுத்த மாதம் 24-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்8 May 2024 8:52 AM IST
- துணைத்தேர்வை எழுத விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் வருகிற 16-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
- தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைத்துள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
சென்னை:
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இந்த தேர்வை 11 ஆயிரத்து 594 பேர் எழுதவில்லை. தேர்வு எழுதியவர்களில் 41 ஆயிரத்து 410 பேர் தோல்வியை தழுவி இருந்தனர்.
இந்த நிலையில் தேர்வை எழுதாத, தோல்வியை தழுவிய மாணவ-மாணவிகளுக்கு அடுத்தகட்ட வாய்ப்பாக துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. அடுத்த மாதம் (ஜூன்) 24-ந்தேதி முதல் வருகிற ஜூலை மாதம் 1-ந்தேதி வரை தேர்வு நடைபெற இருக்கிறது.
இந்த துணைத்தேர்வை எழுத விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் வருகிற 16-ந்தேதி முதல் அடுத்த மாதம் 1-ந்தேதி வரையிலான நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அவரவர் படித்த பள்ளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதேபோல் தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைத்துள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
Next Story
×