search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விளாத்திகுளத்தில் செல்போன் டவரை காணவில்லை- வடிவேலு பட பாணியில் தனியார் நிறுவனம் போலீசில் புகார்
    X

    விளாத்திகுளத்தில் 'செல்போன் டவரை காணவில்லை'- வடிவேலு பட பாணியில் தனியார் நிறுவனம் போலீசில் புகார்

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆய்வு செய்ய வந்தபோது செல்போன் டவர் அந்த இடத்தில் இல்லை என்பது தெரியவந்தது.
    • செல்போன் டவர் அமைந்திருந்த இடத்தில் கான்கிரீட் தூண்கள் மட்டுமே காட்சி அளித்துள்ளது. இதை கண்டு திடுக்கிட்ட அவர்கள் தனியார் நிறுவன மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    விளாத்திகுளம்:

    சினிமா ஒன்றில், 'வெட்டிவெச்சிருந்த கிணத்தை காணோம்' என்று வடிவேல் போலீசில் பரப்பரப்பான புகார் கொடுப்பதுபோல, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் செல்போன் டவர் காணோம் என்று ஒரு புகார் வந்துள்ளது.

    விளாத்திகுளம் அம்பாள் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவருக்கு, காமராஜ் நகர் ரோஸ்லின் மருத்துவமனைக்கு பின்புறம் சொந்தமாக இடம் இருக்கிறது. இந்த நிலத்தில் கடந்த 2003-ம் ஆண்டு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் சார்பில் செல்போன் டவர் ஒன்று அமைக்கப்பட்டது. இதற்காக 20 வருடங்கள் ஒப்பந்தம் போடப்பட்டு, ரூ.20 லட்சம் அந்நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆய்வு செய்ய வந்தபோது செல்போன் டவர் அந்த இடத்தில் இல்லை என்பது தெரியவந்தது. செல்போன் டவர் அமைந்திருந்த இடத்தில் கான்கிரீட் தூண்கள் மட்டுமே காட்சி அளித்துள்ளது. இதை கண்டு திடுக்கிட்ட அவர்கள் தனியார் நிறுவன மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நில உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் டவரின் மதிப்பு ரூ.21 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    Next Story
    ×