என் மலர்
தமிழ்நாடு

X
பொங்கல் பண்டிகை- கோயம்பேட்டில் சிறப்பு காய்கறி சந்தை
By
மாலை மலர்10 Jan 2023 4:26 PM IST

- ஜனவரி 17-ம் தேதி வரை செயல்படும் சிறப்பு சந்தையில் கரும்பு, வாழைக்கன்று, மஞ்சள், இஞ்சி மற்றும் மண்பானை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும்.
- முதல் நாளான இன்று கரும்பு மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது.
சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பின்புறம் 3 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு காய்கறி சந்தை இன்று தொடங்கியது.
இன்று முதல் ஜனவரி 17-ம் தேதி வரை செயல்படும் சிறப்பு சந்தையில் கரும்பு, வாழைக்கன்று, மஞ்சள், இஞ்சி மற்றும் மண்பானை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும்.
முதல் நாளான இன்று கரும்பு மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. சிறப்பு சந்தைக்கு பொதுமக்கள் வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது.
Next Story
×
X