search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராட்சத பள்ளத்தில் மக்கள் விழுந்துவிடாத வகையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
    X

    ராட்சத பள்ளத்தில் மக்கள் விழுந்துவிடாத வகையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

    • சென்னையில் மழை காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்கள் கடுமையாக பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள்.
    • பணிகள் நடைபெறும் இடத்தில் கம்பிகள் நீட்டிக் கொண்டிருப்பதால் குழந்தைகள் மற்றும் பெரி யோர்கள் விழுந்து விடக்கூடாது.

    சென்னை:

    சென்னையில் மழை காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்கள் கடுமையாக பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து வடிகால் பணிகளை அமைக்க உத்தரவிட்டார்.

    இதன்படி சென்னையில் முதல் கட்ட மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்தநிலையில் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    ரூ.447 கோடி மதிப்பில் 2-ம் கட்ட பணிகளை 120 கி.மீ. தூரத்திற்கு மேற் கொள்ள திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    15 மாநகராட்சி மண்டலத்தில் பணிகள் திட்டமிடப்படும நிலையில் பெருங்குடி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

    மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடத்தில் தடுப்புகள் அமைக்கவும், தேவை இருப்பின் மாற்று பாதையை மக்கள் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டுக்குள் பெரும்பாலான பணிகளை முடிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மொத்தமாக 24 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அசோக் நகர், வடபழனி, எம்.ஜி.ஆர். நகர் அண்ணா சாலை பகுதிகளிலும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் நடைபெறும் இடத்தில் கம்பிகள் நீட்டிக் கொண்டிருப்பதால் குழந்தைகள் மற்றும் பெரி யோர்கள் விழுந்து விடக்கூடாது.

    இதனை கருத்தில் கொண்டு மழைநீர் வடிகால் நடைபெறும் இடங்களில் கூடுதலாக தடுப்புகளை அமைத்து பொதுமக்கள் ராட்சத பள்ளத்தில் விழுந்து விடாத வகையில் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×