search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும்- சரத்குமார் வலியுறுத்தல்
    X

    இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும்- சரத்குமார் வலியுறுத்தல்

    • தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து, சென்னை டிபிஐ வளாகத்தில் 3-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகிறார்கள்.
    • இடைநிலை ஆசிரியர்களை அழைத்து பேசி, சம வேலைக்கு, சம ஊதியம் என்ற அடிப்படையில் அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்க பரிசீலித்து, நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

    சென்னை:

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ரா.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    7- வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கிடையே பெரிய அளவில் இருக்கின்ற ஊதிய முரண் பாடுகளை களையவும், "சம வேலைக்கு சம ஊதியம்" என்கின்ற கொள்கையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசின் தொடக்க பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து, சென்னை டிபிஐ வளாகத்தில் 3-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகிறார்கள்.

    இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தினையும், உண்ணாவிரத போராட்டத்தின் தீவிரத்தையும் உணர்ந்து, முதல்-அமைச்சர் சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, 6-வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளை களைந்து, இடைநிலை ஆசிரியர்களை அழைத்து பேசி, "சம வேலைக்கு, சம ஊதியம்" என்ற அடிப்படையில் அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்க பரிசீலித்து, நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×