என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
மழை நீர் வடிகால் பணி- நேரில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்
Byமாலை மலர்25 May 2024 8:26 AM IST
- மாவட்ட ஆட்சியர்களும் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.
- மழை நேரத்தில் நிறுத்தப்பட்ட வடிகால் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் நடைபெற்று வரும் வடிகால் பணிகள் குறித்து தியாகராய நகரில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
சென்னையில் திடீர் கனமழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை மட்டுமின்றி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிற மாவட்டங்களிலும், நடவடிக்கைகள் எடுக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களும் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.
மழை நேரத்தில் நிறுத்தப்பட்ட வடிகால் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தீவிரமாக உள்ளது. மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
Next Story
×