search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாமக்கல் அருகே பன்றி காய்ச்சலுக்கு வங்கி ஊழியர் மனைவி பலி
    X

    நாமக்கல் அருகே பன்றி காய்ச்சலுக்கு வங்கி ஊழியர் மனைவி பலி

    • கிளாரா மேரிக்கு கடந்த 4-ந்தேதி சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
    • கிளாரா மேரியை பரிசோதனை செய்ததில் பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் கோரிமேடு ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கப்ரியல் (வயது 55). அரசு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணி செய்து வருகிறார். இவரது மனைவி கிளாரா மேரி (51).

    இவருக்கு கடந்த 4-ந்தேதி சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் கிளாரா மேரிக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த கிளாரா மேரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் உயரிழந்த கிளாரா மேரி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளியில் சென்று வந்ததால் அங்கிருந்து அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.

    Next Story
    ×