என் மலர்
தமிழ்நாடு
X
சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு தமிழக அரசு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை- அன்புமணி ராமதாசுக்கு, மத்திய மந்திரி பதில்
Byமாலை மலர்16 March 2023 2:15 AM IST (Updated: 16 March 2023 2:15 AM IST)
- சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு மத்திய அரசால் இதுவரை சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படவில்லை.
- சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு திட்டத்துக்கு தமிழக அரசு ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை.
புதுடெல்லி:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நாடாளுமன்ற மாநிலங்களவையில், 'சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதா?, இந்த திட்டத்துக்கு தமிழக அரசு ஆட்சேபம் எதுவும் தெரிவித்துள்ளதா?' என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி, 'சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு மத்திய அரசால் இதுவரை சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படவில்லை. இந்த திட்டத்துக்கு தமிழக அரசு ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை' என பதில் அளித்தார்.
Next Story
×
X