என் மலர்
தமிழ்நாடு
நெரிசலை தவிர்க்க கோயம்பேடு பஸ் நிலையத்தில் தற்காலிக நடைமேடை
- கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் குழப்பம் இல்லாமல் எளிதாக பயணம் செய்ய வசதியாக விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
- அடுத்து புறப்படும் பஸ் பற்றிய விவரம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணத்தை தொடர்ந்தனர்.
சென்னை:
கோயம்பேடு பஸ் நிலையத்தில் 1 முதல் 6 வரை நடைமேடைகள் உள்ளன. நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், செங்கோட்டை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோவை, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு இங்கிருந்து பஸ்கள் இயக்கப்பட்டன.
நீண்ட தூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்கள் முழுவதும் அங்கிருந்து இயக்கப்பட்டன. பொதுமக்கள் வசதிக்காக தற்காலிக நடைமேடை (பிளாட்பாரம்) அமைக்கப்பட்டு உள்ளன. பஸ் டெப்போவில் நடைமேடை 7, 8, 9 என அமைக்கப்பட்டு அங்கிருந்து காரைக்குடி, ராமேஸ்வரம், கோவை, ஊட்டி, வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் குழப்பம் இல்லாமல் எளிதாக பயணம் செய்ய வசதியாக விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அடுத்து புறப்படும் பஸ் பற்றிய விவரம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணத்தை தொடர்ந்தனர்.
தற்காலிக நடைமேடை அமைக்கப்பட்டதால் நெரிசல் இல்லாமல் மக்கள் பயணம் செய்வதை காண முடிந்தது.