என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
திருமாவளவன் மவுனம் ஏனோ...
- 3 வருடத்திற்கு ஒரு முறை மாவட்ட நிர்வாகிகளை மாற்றுவது வழக்கம். ஆனால் 7 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர்கள் நீடித்து வருகிறார்கள்.
- விவேகத்துடன் வேகமாகவும் செயல்பட்டால் தான் கட்சியை மேலும் வலுப்படுத்த முடியும் என்று அண்ணனுக்கு நெருக்கமான தம்பிகள் ஆதங்கப்படுகிறார்கள்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்வதற்கான ஆயத்த பணிகளை 2 வருடத்திற்கு மேலாக கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மேற்கொண்டு வருகிறார்.
இதற்கான பணியில் தலைமை கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு மாவட்டம் வாரியாக சென்று விண்ணப்பங்களை பெற்று பரிசீலனை செய்யப்பட்டது.
ஆனாலும் இன்னும் மாற்றம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிடாமல் இருக்கிறார். 3 வருடத்திற்கு ஒரு முறை மாவட்ட நிர்வாகிகளை மாற்றுவது வழக்கம். ஆனால் 7 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர்கள் நீடித்து வருகிறார்கள். தற்போது உள்ள பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவது உறுதியாகி விட்டதால் புதிய மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை அறிவிப்பார் என்று கட்சி தொண்டர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். தற்போது பொறுப்பில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவதால் கட்சிப் பணியில் ஆர்வம் காட்டவில்லை.
இதனால் போராட்ட களங்களில் உற்சாகமின்றி நிர்வாகிகள் செயல்படுகின்றனர். கட்சி தலைமை அறிவிக்கின்ற போராட்டங்களை முழுமையாக செய்ய தயங்குகின்றனர்.
தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் திருமாவளவன் ஆர்வம் காட்டாமல் மவுனமாக இருப்பது ஏன்? என்ற கேள்வி கட்சி உயர்மட்ட நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை மேலோங்கி வருகிறது.
திருமாவளவன் எதற்காக புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் விஷயத்தை தாமதப்படுத்துகிறார் என்பது கட்சிக்குள் இப்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமாவளவனின் மவுனம் கலைந்தால் யாருக்கு லாபம்? யாருக்கு பாதிப்பு? என்பது தெரிந்து விடும். விவேகத்துடன் வேகமாகவும் செயல்பட்டால் தான் கட்சியை மேலும் வலுப்படுத்த முடியும் என்று அண்ணனுக்கு நெருக்கமான தம்பிகள் ஆதங்கப்படுகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்