search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் கனிமொழி?  இன்று மாலை முடிவு
    X

    பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் கனிமொழி? இன்று மாலை முடிவு

    • பொருளாளர் பதவியில் இருந்த எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
    • கூட்டத்தில் பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி விரிவாக விளக்கி பேசுகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ள நிலையில், 21 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த எம்.பி.க்களில் 10 பேர் புதுமுகங்கள் ஆவர்.

    பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி ஆலோசிப்பதற்கு, பாராளுமன்ற குழுவில் இடம் பெறுபவர்களை தேர்வு செய்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவராக கனிமொழி தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் டி.ஆர்.பாலுவின் பெயரும் இடம்பெறுகிறது.

    பொருளாளர் பதவியில் இருந்த எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    ஆனால் அவர் வகித்த பொருளாளர் பதவிக்கு ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த கூட்டத்தில் பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி விரிவாக விளக்கி பேசுகிறார்.

    Next Story
    ×