என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
விக்கிரவாண்டி குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு மாற்றப்பட்ட காங்கிரஸ் பிரமுகரின் சகோதரர் மாயம்
- வேலூரை அடுத்த வாணியம்பாடி கருணை இல்லத்தில், எனது சகோதரர் இறந்து விட்டதாக ஒரு சிலர் கூறுகின்றனர்.
- ஆசிரமத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் சில மருந்துகளை உட்கொண்டதால் மயங்கி விழுந்தார்.
கடலூர்:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினராக இருப்பவர் ஜி.கிருஷ்ணமூர்த்தி. இவர் கடலூர் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது.
எனது மூத்த சகோதர் ஜெயக்குமார் (வயது 60) என்பவரை கடலூரில் உள்ள இக்னைட் சாரிட்ட பிள் டிரஸ்டில் 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் அனுமதித்தேன். அங்கு தங்கியிருந்த எனது சகோதரரை விக்கிரவாண்டியை அடுத்த குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு மாற்றியுள்ளதாக சாரிட்ட பிள் ஊழியர்கள் என்னிடம் தெரிவித்தனர். மேலும், இயற்கை சூழலுடன் அங்கு இருக்கலாம், வசதிகள் மிகச் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
இதனை அடுத்து குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் இருந்த ஜாபருல்லா என்பவரை காணவில்லை என்ற புகார் மீது விசாரணை நடத்தப்பட்டதை நான் அறிந்தேன். உடனடியாக அன்பு ஜோதி ஆசிரமத்தை தொடர்பு கொண்டு எனது சகோதரரின் நிலை குறித்து விசாரித்தேன்.
உங்களது சகோதரரை வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள சரணாலயம் அறக்கட்டளை நடத்தும் கருணை இல்லத்திற்கு மாற்றிவிட்டதாக கூறினார்கள். ஆனால் அங்கும் எனது சகோதரர் இல்லை. எனவே, எனது சகோதரர் இப்போது எங்கே இருக்கிறார். அவர் உயிருடன் இருக்கிறாரா? என்பது போன்ற கேள்விகள் எனக்குள் எழுந்தன.
வேலூரை அடுத்த வாணியம்பாடி கருணை இல்லத்தில், எனது சகோதரர் இறந்து விட்டதாக ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால், அங்கிருந்து எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி எனது சகோதரர் ஜெயக்குமாரின் நிலை குறித்து எனக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
இது குறித்து கிருஷ்ண மூர்த்தி கூறும் போது:-
கடலூரில் உள்ள ஆசிர மத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் கைதிகளை மேற்கோள் காட்டி, அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டனர். சிலர் சித்ரவதை செய்யப்பட்டு அவர்களின் மன உறுதியை பாதிக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டன. ஆசிரமத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் சில மருந்துகளை உட்கொண்டதால் மயங்கி விழுந்தார். 3 நாட்களுக்குப் பிறகு சுயநினைவு திரும்பிய அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். ஆசிரம அதிகாரிகளிடம் எனது தொடர்பு விவரங்கள் உள்ளன. எனது சகோதரர் ஏதாவது நோயால் இறந்திருந்தால், அவர் இறந்ததை என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் எந்த தகவலும் இல்லை என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்