என் மலர்
தமிழ்நாடு
ஆ.ராசா எம்.பி. வாகனத்தை வழிமறித்து நின்ற காட்டு யானைகள் கூட்டத்தால் பரபரப்பு
- கேர்மாளம் நோக்கி ஆ.ராசா எம்.பி. வாகனம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாகனம், வனத்துறையினர் வாகனம் சென்று கொண்டிருந்தது.
- யானைக்கூட்டம் நடுரோட்டில் இருந்து வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்கேயே வழிமறித்து நின்றது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, கடம்பூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதியில் ரூ.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தி.மு.க. எம்.பி. ஆ.ராசா தொடங்கி வைத்தார்.
விழாவில் கலந்து கொண்டு தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கடம்பூர் செல்வதற்காக அடர்ந்த வனப்பகுதியில் கேர்மாளம் நோக்கி ஆ.ராசா எம்.பி. வாகனம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாகனம், வனத்துறையினர் வாகனம் சென்று கொண்டிருந்தது.
கேர்மாளம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது அந்த வாகனங்களை வழிமறித்து சாலையின் நடுவே 3 யானைகள் கூட்டம் நின்று கொண்டிருந்தன.
மேலும் வாகனங்களை பார்த்து யானை சத்தமாகப் பிளிரியது. யானைக்கூட்டம் நடுரோட்டில் இருந்து வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்கேயே வழிமறித்து நின்றது. பிறகு வனத்துறையினர் ஜீப் மூலம் அதிக சத்தம் கொண்ட ஒலிகளை எழுப்பினர்.
அதனைத்தொடர்ந்து அந்த யானைக்கூட்டம் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின் ஆ.ராசா எம்.பி. வாகனம் வனப்பகுதியை கடந்து சென்றது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.