என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விஜயலட்சுமி
கார் ஏற்றி இளம் பெண் கொலை: மதுபாட்டில் விற்பனை தகராறில் நடந்ததா? போலீசார் விசாரணை
- என் மனைவிக்கும் அந்த பகுதியை சேர்ந்த 3 பேருக்கும் மதுபாட்டில் விற்பனை செய்வது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
- செய்யாறு போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு:
செய்யாறு டவுன், வெங்கட்ராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் பட்டு நெசவு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 39).
இவர் இன்று காலை 7 மணி அளவில் பைக்கில் செய்யாறு பைபாஸ் சாலையில் வந்தவாசியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அங்குள்ள தனியார் பள்ளி அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த கார் பைக் மீது மோதியது.
இதில் விஜயலட்சுமி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இது சம்பந்தமாக அவரது கணவர் முருகன் செய்யாறு போலீசில் புகார் அளித்துள்ளார்.
என் மனைவிக்கும் அந்த பகுதியை சேர்ந்த 3 பேருக்கும் மதுபாட்டில் விற்பனை செய்வது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
கும்பலை சேர்ந்த ஒருவர் 3 நாட்களுக்கு முன்பு நாங்கள் விற்கும் பகுதியில் மதுவிற்றால் கொலை செய்துவிடுவேன் என்று எனது மனைவியை மிரட்டி சென்றார். அந்த கும்பல் தான் எனது மனைவியை கார் ஏற்றி கொலை செய்துள்ளனர்.
அந்த 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்யாறு போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






