search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்- முதலமைச்சர்
    X

    வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்- முதலமைச்சர்

    • வங்கதேசத்தில் கலவரம் காரணமாக தமிழக மாணவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
    • வங்கதேசத்தில் தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள் அயலக தமிழர் நலத்துறையின் கட்டணமில்லா எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    சென்னை:

    வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    வங்கதேசத்தில் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமிழர்கள் சிலர் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அங்கு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. உதவிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் விவரங்களை பெற்று அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்க வேண்டும்.

    வங்கதேசத்தில் கலவரம் காரணமாக தமிழக மாணவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அங்கு சிக்கியுள்ள தமிழர்களுக்கு அயலக தமிழர் நலன் ஆணையம் மூலம் உதவிகளை பெற தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கதேசத்தில் தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள் அயலக தமிழர் நலத்துறையின் கட்டணமில்லா எண்களை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: இந்தியாவிற்குள் - +91 1800 309 3793, வெளிநாடு - +91 80 6900 9900 எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    வங்கதேசத்தின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து தமிழர்களுக்கு உதவிகளை செய்வதற்கு தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×