search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோத்தகிரி அருகே மது வாங்க வந்தவரை தகாத வார்த்தையால் திட்டிய டாஸ்மாக் ஊழியர்
    X

    கோத்தகிரி அருகே மது வாங்க வந்தவரை தகாத வார்த்தையால் திட்டிய டாஸ்மாக் ஊழியர்

    • வாக்குவாதம் முற்றவே, டாஸ்மாக் ஊழியர், மதுபாட்டில் வாங்க வந்த நபரை, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
    • அந்த நபர் நான் எதற்கு கூடுதலாக பணம் தர வேண்டும் என கேட்டு ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அரவேணு:

    கோத்தகிரி அருகே குன்னூர், ஊட்டி செல்லும் சாலை கட்டபெட்டு சந்திப்பில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த கடையில் அதிகாலை நேரங்களில் மதுக்கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    நாள்தோறும் இந்த கடைக்கு 100க்கும் மேற்பட்டோர் வந்து மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஒருவர் மதுபான கடைக்கு வந்தார்.

    பின்னர் மதுபாட்டில்களை வாங்கினார். அப்போது அங்கு பணியில் இருந்த டாஸ்மாக் ஊழியர், கூடுதல் விலையாக ரூ.10 தர வேண்டும் என கேட்டதாக தெரிகிறது.

    ஆனால் அந்த நபர் நான் எதற்கு கூடுதலாக பணம் தர வேண்டும் என கேட்டு ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    வாக்குவாதம் முற்றவே, டாஸ்மாக் ஊழியர், மதுபாட்டில் வாங்க வந்த நபரை, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    மது பாட்டில் வாங்க வந்த வாடிக்கையாளரை டாஸ்மாக் ஊழியர் தகாத வார்த்தையால் திட்டிய சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×