search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது
    X

    திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது

    • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
    • சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

    வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக திமுகவில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

    அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

    இந்தக் குழு திமுகவில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியிலான சீரமைப்புகளை தலைமைக்கு தெரிவிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு பங்கேற்றுள்ளது.

    கட்சியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை தலைமைக்கு பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பு குழு மேற்கொள்ளும்.

    Next Story
    ×