என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கல்குவாரி மற்றும் கிரஷர் தொழிற்சாலைகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்- ஜி.கே.வாசன்
- பல்வேறு கோரிக்கைகளை வைத்து கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் கல்குவாரி மற்றும் கிரஷர் தொழிற்சாலைகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
அரசின் விதிகளுக்குட்பட்டு இயங்கிவரும் கல்குவாரிகள் தங்கள் உரிமைத்தை புதிப்பிக்க விண்ணப்பிக்கும் போது பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 2014 ஆண்டிற்கு முன்பு இருந்த பழைய நடைமுறையிலேயே தற்பொழுதும் இயங்க அனுமதி வழங்க வேண்டும். மேலும் 5 ஹெக்டேருக்கு மேல் குவாரிகள் அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தி அதன்பின் உரிமம் வழங்கப்படுகிறது. இதில் 5 ஹெக்டேர் என்பதை 25 ஹெக்டேராக உயர்த்தி அனுமதி வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்து கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆகவே கல்குவாரி மற்றும் கிரஷர்கள் தொழிற்சாலை உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலனை செய்து தமிழக அரசு விரைந்து அவற்றை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.