என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பள்ளி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற மாணவியின் தாய்
- பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட மாணவிகள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- புரோக்கர் நதியாவின் வாடிக்கையாளர்கள் யார்-யார் என்பது பற்றிய பட்டியலையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
சென்னை:
சென்னை வளசரவாக்கத்தில் பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்துக்காக நதியா என்ற பெண் புரோக்கர் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருடன் குடும்பத்தினர் 6 பேரும் பிடிபட்ட நிலையில், மாணவிகளை வெளியில் அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்த கோவை வாலிபரும், சென்னையை சேர்ந்த 70 வயது முதியவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண் புரோக்கர் நதியா, பிளஸ்-2 படிக்கும் தனது மகளை வைத்து மாணவிகளுக்கு வலை விரித்து பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டிருந்தார். மாணவிகள் விலை பேசப்பட்டு வெளிமாநிலங்களுக்கும் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட வெளியிடங்களுக்கு மாணவிகளை அழைத்துச் செல்ல பெரிய மனிதர்கள் பலர் ஆசைப்பட்டு விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இதற்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை பணத்தை வாங்கிக் கொண்டு தரகர்கள் அனுப்பி வைத்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட மாணவிகள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோவை வாலிபர் மற்றும் சென்னையை சேர்ந்த முதியவரை போன்று யார்-யாரெல்லாம் சிறுமிகள் என்று தெரிந்தும் மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டார்கள்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி பாலியல் புரோக்கர் நதியாவின் வாடிக்கையாளர்கள் யார்-யார்? என்பது பற்றிய பட்டியலையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் புரோக்கர்கள் அனைவரையும் கூண்டோடு கைது செய்ய அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி விபசார தடுப்பு பிரிவு போலீசார் பாலியல் புரோக்கர்களை பட்டியல் எடுத்து அவர்களை முழுமையாக வேட்டையாட முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக லாட்ஜுகள், தங்கும் விடுதிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்