என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![என்.ஐ.ஏ.வை வைத்து சிறுபான்மை அமைப்புகளை அச்சுறுத்த நினைக்கிறார்கள்- நெல்லை முபாரக் பேட்டி என்.ஐ.ஏ.வை வைத்து சிறுபான்மை அமைப்புகளை அச்சுறுத்த நினைக்கிறார்கள்- நெல்லை முபாரக் பேட்டி](https://media.maalaimalar.com/h-upload/2023/07/23/1920057-18.webp)
X
என்.ஐ.ஏ.வை வைத்து சிறுபான்மை அமைப்புகளை அச்சுறுத்த நினைக்கிறார்கள்- நெல்லை முபாரக் பேட்டி
By
Maalaimalar23 July 2023 12:52 PM IST (Updated: 23 July 2023 12:52 PM IST)
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை என்பது நரேந்திர மோடி விசாரணை என்று தான் சொல்ல வேண்டும்.
- தஞ்சாவூர் வழக்கை தொடர்புபடுத்தி விசாரணை நடத்தியதாக கூறுகின்றனர்.
என்.ஐ.ஏ. சோதனை தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நிருபர்களிடம் கூறியதாவது:-
என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை என்பது நரேந்திர மோடி விசாரணை என்று தான் சொல்ல வேண்டும். தஞ்சாவூர் வழக்கை தொடர்புபடுத்தி விசாரணை நடத்தியதாக கூறுகின்றனர்.
சிறுபான்மை இயக்கங்களை அடக்க, அரசியல் காழ்புணர்ச்சியோடு விசாரணை நடத்தப்பட்டது. எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கும், இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னுடைய மொபைல் போன் தவிர வேறு எதையும் எடுத்து செல்லவில்லை.
அமலாக்கத்துறை போல் என்.ஐ.ஏ.வை வைத்து சிறுபான்மை அமைப்புகளை அச்சுறுத்த நினைக்கிறார்கள். இந்த வழக்கினை நீதிமன்றம் மூலம் நாங்கள் சந்திப்போம். மக்கள் மன்றம் மூலம் என்.ஐ.ஏ.யின் முகத்திரையை கிழிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
X