search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருமானம் ரூ.2.93 கோடி
    X

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருமானம் ரூ.2.93 கோடி

    • கோவில் வசந்த மண்டபத்தில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
    • வெளிநாட்டு கரன்சிகள் 424 கிடைக்கப்பெற்றது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் மாதந்தோறும் எண்ணப்படுகிறது.

    இதன்படி செப்டம்பர் மாதம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில் நேற்று கோவில் வசந்த மண்டபத்தில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

    உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக்குழுவினர்கள், தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணிக் குழுவினர்கள் ஈடுட்டனர்.

    இதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 76 லட்சத்து 88 ஆயிரத்து 763, ஆவணி திருவிழா தற்காலிக உண்டியல் மூலம் ரூ.25 ஆயிரத்து 520, மேல கோபுர திருப்பணி உண்டியல் மூலம் ரூ.875, கோசாலை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.19 ஆயிரத்து 711, யானை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 89, கோவில் அன்னதானம் மூலம் ரூ.15லட்சத்து 8 ஆயிரத்து 214, மேல கோவில் உண்டியல் மூலம் ரூ.15 ஆயிரத்து 113, நாசரேத் கோவில் மூலம் ரூ. 1,315, கிருஷ்ணாபுரம் கோவில் மூலம் ரூ.7ஆயிரத்து 432ம் என மொத்தம் ரூ.2 கோடியே 93 லட்சத்து 80 ஆயிரத்து 32 கிடைத்தது.

    இதுபோக தங்கம் 2 கிலோ100 கிராம், வெள்ளி 19 கிலோ, பித்தளை 35 கிலோ, செம்பு 4 கிலோ, தகரம் 3 கிலோ, மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 424 கிடைக்கப்பெற்றது.

    உண்டியல் எண்ணும் பணியில் அறங்காவலர் குழு உறுப்பினர் செந்தில் முருகன், தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், திருச்செந்தூர் ஆய்வாளர் செந்தில் நாயகி, பொதுமக்கள் பிரதிநிதியாக மோகன், சுப்பிரமணிய மணியன், அயல் பணி மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.

    Next Story
    ×